கண்களை பராமரிப்போம்!
இந்த உலகின் அழகினை இரசிக்க நமக்கான ஓர் அழகிய உறுப்பு நம் இரு விழிகள். அதனை பத்திரமாக பராமரிப்பது நம் கடமை. தற்போது நடைபெற்று வரும் கோவிட் - 19 தொற்று நோயால், நாம் அனைவரும் டிவி, செல்போன், மடிக்கணினி போன்ற டிஜிட்டல் திரைக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறோம். இது நம் கண்களில் வலியை ஏற்படுத்தும் மற்றும் நம் கண் பார்வையில் சிரமத்தை ஏற்படுத்தும். பொதுவாகவே, நாம் அனைவரும் டிவி, மடிக்கணினி அல்லது தொலைபேசி போன்ற டிஜிட்டல் திரையை பார்க்கும் போது அதிகமாக கண் சிமிட்ட மாட்டோம். இது நம் கண்களை வறண்டு போக செய்யும் மற்றும் இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேலும் தூங்கும் முன் தொலைபேசியை உற்று பார்ப்பது நம் தூக்கத்தை கெடுக்கும். இதனால் கண்கள் சிவந்து போகலாம், மற்றும் கண்களில் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம். நாம் தவிர்க்க வேண்டிய சில விசயங்கள்: கண்களை கசக்குவது: நாம் அனைவரும் கண்களில் நமைச்சல் இருக்கும் போது நம் கண்களை கசக்கி கொள்வோம். அடுத்த முறை இவ்வாறு செய்வதை தயவு கூர்ந்து நிறுத்துங்கள். ஏனெனில், நம் கண்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுப்பது உண்மையில் நம் பிரச்சனையை இன்னும் மோச...