Posts

Showing posts from February, 2022

மாணவர்களிடம் செல்பேன் பயன்பாட்டை குறைப்பது எப்படி?

செய்திதாளில் வந்த இருவேறு செய்திகள்  1. செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம் வகுப்பறை ஆசிரியருக்கு சரமாரி கத்திகுத்து.  2.செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை.   ஆன்லைன் வகுப்புகள், லாக்டவுனால் விளையாட வெளியே அனுப்ப முடியாத சூழல், நோய்தொற்று குறித்த பயம் என பல காரணங்களால் இந்த கொரோனா சமயங்களில் மாணவர்களிடம் செல்பேன் உபயோகம் அதிகரித்து இருக்கிறது. இதில் செல்போனை கற்றலுக்காக 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை 62.6 சதவீத மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் செல்போன் மூலம் பங்கேற்கிறார்கள். மேலும், 8 முதல் 18 வயதுடைய 30.2 சதவீத மாணவர்களிடம் சொந்த ஸ்மார்ட்போன், 19 சதவீதம் பேர் மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள். மேலும், 10.10 சதவீத மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு உபயோகிப்பதும், மீதமுள்ளவர்களில் 52.90 சதவீதம் பேர் வாட்ஸ்ஆப், முகநூல் உபயோகிக்கவும், 31.90 சதவீத மாணவர்கள் விளையாடுவதற்கும், 44.10 மாணவர்கள் பாட்டு கேட...