மாணவர்களிடம் செல்பேன் பயன்பாட்டை குறைப்பது எப்படி?

செய்திதாளில் வந்த இருவேறு செய்திகள்
 1. செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம் வகுப்பறை ஆசிரியருக்கு சரமாரி கத்திகுத்து.
 2.செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை. 
 ஆன்லைன் வகுப்புகள், லாக்டவுனால் விளையாட வெளியே அனுப்ப முடியாத சூழல், நோய்தொற்று குறித்த பயம் என பல காரணங்களால் இந்த கொரோனா சமயங்களில் மாணவர்களிடம் செல்பேன் உபயோகம் அதிகரித்து இருக்கிறது. இதில் செல்போனை கற்றலுக்காக 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை 62.6 சதவீத மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் செல்போன் மூலம் பங்கேற்கிறார்கள். மேலும், 8 முதல் 18 வயதுடைய 30.2 சதவீத மாணவர்களிடம் சொந்த ஸ்மார்ட்போன், 19 சதவீதம் பேர் மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.

மேலும், 10.10 சதவீத மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு உபயோகிப்பதும், மீதமுள்ளவர்களில் 52.90 சதவீதம் பேர் வாட்ஸ்ஆப், முகநூல் உபயோகிக்கவும், 31.90 சதவீத மாணவர்கள் விளையாடுவதற்கும், 44.10 மாணவர்கள் பாட்டு கேட்பதற்கும், 3.50 சதவீத மாணவர்கள் வீடியோ பார்ப்பதற்கும் உபயோகிப்பது தெரியவந்துள்ளது.

இதில், 42.90 சதவீத மாணவர்களிடம் சமூக ஊடகங்களில் கணக்கு உள்ளது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகவுள்ளது. அதில் 36.8 சதவீத மாணவர்களுக்கு முகநூலிலும், 45.50 சதவீத மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராமிலும் கணக்கு உள்ளது.

10 வயது மாணவர்களுக்கு 37.8 சதவீத பேர் முகநூலில், 24.3 சதவீத பேர் இன்ஸ்டாகிராமில்  கணக்கு வைத்துள்ளனர். 

மேலும், செல்போன் பயன்பாட்டு மூலம் 37.15 சதவீத மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிக செல்போன் பயன்பாடு மாணவர்களின் மனநலன் மற்றும் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.

சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலைப் பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது. அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை.

மனதில் ஏற்படும் மாற்றங்கள்

நினைவாற்றைலைப் பாதிக்கும்... அனைத்து தகவல்களையும் கையில் இருக்கும் இந்தச் சிறிய சுறுசுறுப்பு மூளையில் பதிவேற்றிவிடுகிறோம். இது, எந்த ஒரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை உணராமல் இருக்கச்செய்யும். இதனால், ஒரு செயலை உள்வாங்கும் திறன் / கண்காணிப்புத் திறனில் குறைபாடு ஏற்படும்.

மனநோய்க்கு வழிவகுக்கும்... தன்னிச்சையாக செல்போனுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நோமோஃபோபியா (Nomophobia) என்னும் மனநோயை உண்டாகும். உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே, செல்போனைப் பார்க்கும் பழக்கம், அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம், நம்மைவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம், அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் (இந்தச் சமயங்களில் ஸ்க்ரீனில் உள்ள நேரம், தேதிகூட நம் நினைவில் இருக்காது), தன்னிச்சையாக மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம்... போன்றவை.

பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.

மனஅழுத்தத்துக்கு மகான்... செல்போன்கள். இதை அதிகம் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாமல் இருந்தால் ஒருவித மனஅழுத்தம் உண்டாகும். மீண்டும் செல்போனைப் பயன்படுத்தாமல் இருக்கும் வரை மனச்சோர்வு மற்றும் கோபத்தை உண்டாக்கும். 

அதிகமாக இதை உபயோகிப்பது, தூக்கமின்மையை ஏற்படுத்தும். இரவு வேளையில் அதிக நேரம் உபயோகிப்பது மனஉளைச்சலுக்கு வழிவகுக்கும்.

ஆன்லைன் கோம் விளையாடும் மாணவர்கள் அதற்கு அதிக நேரம் செலவிடுகின்றனர். கண்டிக்கும் போது அவர்களின் மனநிலை மாறுகிறது. அது கோவமாகவோ இயலாமையாகவோ வெளிபட்டு தற்கொலை எண்ணம் அல்லது கண்டிப்பவரை கொள்ளும் எண்ணம் உண்டாகிறது. இத்தகைய மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.

செல்பேன் பயன்பாட்டை குறைப்பது எப்படி?

தன் பிள்ளைகளுக்கு செல்பேனில் எல்லாம் தெரிகிறது என பெருமைகொள்ளும் பெற்றோர்களா நீங்கள்? உங்கள் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக செல்பேனுக்கு அடிமையாகிறார்கள் என உணருங்கள். உங்களுக்கு தொல்லைதர கூடாது என்பதற்காக அவர்கள் கைகளில் செல்போனை கொடுக்காதீர்கள். அவர்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். அவர்களின் தனிதிறமைகளை கண்டறிந்து அதில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் கண்முன் மட்டும் அவர்களிடம் செல்போனை கொடுங்கள்.

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனி போன் வாங்கி தர வோண்டாம். பெற்றோர் போனயே உபயோகிக்க பழக்கபடுத்துங்கள்.

பெற்றோரும் போனில் நேரம் செலவிடுவதை குறைக்க வேண்டும்.

தேவையற்ற செயலிகளை பேனில் இருந்து நீக்குங்கள். 

மாணவர்கள் பேன் உபயோகிக்க நேர அளவை வகுத்திடுங்கள். இரவு நேரங்களில் மாணவர்களிடம் போனை கொடுக்காதீர்கள்.

குழந்தைகள் மன சோர்வு அடையாமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும்.
மாணவர்களுக்கு செல்போன் மட்டுமே உலகம் அல்ல என அறிவுரை வழங்க வேண்டியது அவசியமாகும்.

நாம் வாழும் டிஜிட்டல் உலகில் நம் குழந்தைகள் அடிமைகளாகாமல் காப்பது நம் பொறுப்பு. எனவே தேவைக்கு மட்டும் டிஜிட்டல் பொருள்களை பயன்படுத்த பழக்கபடுத்தி கொள்வோம். 


 

Comments

Popular posts from this blog

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

குறட்டை ஆபத்தானதா??

டெங்கு காய்ச்சல் 360•