டெங்கு காய்ச்சல் 360•
மழைக்காலம் துவங்கிவிட்டது. கனமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, வெள்ள நீர் வீடுகளில் புகுவது என தொடர் செய்திகள் நம்மை அச்சுறுத்துகின்றன. கூடவே மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலும் தான். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது சற்று அதிகரித்து வருகிறது. டெங்குவின் அறிகுறிகளை முதலிலேயே கண்டு சரிசெய்வதும் வராமல் நம்மை தற்காத்து கொள்வதும் அவசியம். டெங்கு காய்ச்சல் பரவுவது எப்படி? ஏடிஸ் எகிப்தி (Aedes aegypti) என்ற ஒருவகை கொசுவால் ஏற்படக்கூடியது டெங்கு காய்ச்சல். மற்ற வகை கொசுக்களிலிருந்து ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். இவற்றின் உடல் மற்றும் கால்களில் வெள்ளை நிற வரிகள் காணப்படும். அதனால் இவற்றை `புலி கொசு' என்றும் கூறுவார்கள். இது பகலில் மட்டும் கடிக்கும் தன்மை கொண்ட கொசுவாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரை ஏடிஸ் எகிப்தி கொசு கடிக்கும்போது, எளிதில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பாகிறது. இது கொரோனாவை போல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்றுநோய் இல்லை. ஏடிஸ் எகிப்தி வகை கொசு ஒருவரைக் கடிப்பதால் மட்டுமே டெங்...