வலிமிக்க மாதவிடாயால் அவதிபடுவது ஏன்?
மாதாமாதம் வரும் மாதவிடாய் நம்மில் பலருக்கு வலியுடன் கூடியதாகவே உள்ளது. சிலருக்கு வலி தாங்க கூடியதாகும், சிலருக்கு வலி தாங்க முடியாமல் அவதிபடுவதாகவும் இருக்கும். 'ஏன்தான் இந்த வலி எல்லாம் வருதோ. ஏன்தான் பெண்ணாக பிறந்தமோ ' ௭ன பல பெண்கள் மாதவிடாய் வலியால் புலம்புவதை நாம் கோட்டு இருப்போம். மாதவிடாய் வலியால் அவதிபடும் பெண்கள் பலர் படுக்கையில் உருண்டு, பிரண்டு தனக்கென வலிகுறைய சௌவுகரியமான சூழலை தேடுவார்கள். அந்த 3 நாட்களும் மிகுந்த வலி வேதனையுடனேயே ௭ப்போது மாதவிடாய் முடியும் என காத்திருப்பார்கள். மாதவிடாயின்போது வலி வருவது ஏன்? மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும், மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. மாதவிடாய் சமயத்தில் விரிவடைந்திருக்கும் கர்ப்பப்பை, குருதி வெளியேறி சுருங்குவதால் அந்த வலி ஏற்படுகிறது. இந்த மாதவிடாய் வலி என்பது இயல்பானது. அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது அடிவயிற்றுப்பகுதியில் தசைப்பிடிப்பு, தொடைப் பகுதி வலி, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில தொந்தரவான அறிகுறிகள் தோன்றுகின்றன. இது சகஜம்தான்....