மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம்( Premenstrual syndrome)
மாதவிடாய்க்கு முந்தைய மனஅழுத்தம் (PMS-Premenstrual Syndrome) பற்றி நமக்கு தெரியுமா???
பல பெண்கள் இன்று அலுவலக பணிகள், வீட்டு வேலைகள் என இயந்திரமாக சுற்றி வருகின்றன. இவர்களுக்கு தனது உடல்நிலையை பற்றி கவலை கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ நேரம் இருப்பதில்லை. இத்தகைய பெண்களே இன்று அதிக அளவில் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தால் அவதிக்கு உள்ளாகின்றனர். தோராயமாக 70 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் உள்ளது.
பூப்படையும் காலம் துவங்கி மாதவிடாய் நிற்கும் சமயம் வரை மாதாமாதம் உடல் ரீதியாக பல மாற்றங்களை 30-40 வருடங்கள் பெண்கள் சந்திக்கின்றனர். இந்த மாற்றங்களுக்கு மாதவிடாய் காலத்தில் நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே காரணம். ஹார்மோன்கள் நம் உடலின் இயக்கம் மற்றும் மனதில் தன்மையும் மாற்றும் வல்லமை கொண்டது.
மாதவிடாய் முடிந்த முதல் 2 வாரங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இந்த சமயத்தில் பெண்கள் மிக உற்சாகமாகவும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். வேலைகளில் விருப்பத்துடன் செய்வது, தனது தகுதியை மேம்படுத்திக் கொள்வது, தனது துறையில் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வது என்று மிக உற்சாகமாக இருப்பார்கள். குடும்ப வரும் உறவிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள்.
மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Premenstrual Syndrome) என்றால் என்ன? மாதவிடாய் வருவதற்கு ஒர்இரு வாரங்களுக்கு முன்பு உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது இதனால் பெண்களின் உடல் மற்றும் மனதில் மாற்றம் ஏற்படுகிறது.இந்த ஹார்மோன் குறைவே மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.
உடல் ரீதியான அறிகுறிகள்:
1.வயிறு உப்புவது.
2.நெஞ்செரிச்சல்.
3.பேதி அல்லது தளர்வான மலைக்கழிவு.
4.உணவுக்காக ஏங்குவது.
5.மலச்சிக்கல்.
6.தலைவலி.
7.மார்பகங்களில் வலி, வீக்கமாக உணர்வது
8.தொடைகளில் வலி.
9.முதுகு வலி.
10.தசைப்பிடிப்புகள்.
11.அதிகபடியான வியர்வை
உணர்வுப்பூர்வமான அறிகுறிகள்:
1.எரிச்சலாவது. (Irritable)
2.விரக்தியடைவது.
3.தேவையற்ற மனகுழப்பம்.
4.கவனிப்பதில் தொந்தரவு.
5.பதற்றம்.
6.மனச்சோர்வு.
7.ஊசலாடும் மனநிலை.
8.தூக்கமின்மை.
9.தன்னை தாழ்வாக எண்ணுவது
10. குடும்ப உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது
11. அதிகப்படியாக கோபப்படுவது
எவ்வாறு சரி செய்வது?
1.இதனை கையாள வீட்டில் ஆண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் இந்த சமயங்களில் கோபப்படும் போதும், எரிந்து விழும்போதும் அவர்களை புரிந்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரும் நிலையை உருவாக்கக் கூடாது. அவர்களது வேலை சுமையை குறைக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
2. ஆரோக்கியமான உணவுகளில் உட்கொள்ள வேண்டும். உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.ஒரே நேரம் அதிகமாக உண்பதைவிட, அடிக்கடி, அளவாக சாப்பிடுவது நல்லது. மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள், பொரித்த உணவு வகைகள், அதிகம் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை குறைத்தால், வயிறு உப்புவது , மார்பகங்கள் கனப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.
4.நார்சத்து அதிகம் உள்ள காய்க்கறிகள், பழவகைகள், சிறுதானியம் உள்ள உணவு வகைகள் அதிகமாக உண்ணவேண்டும். காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம் .
5.ஒரு நாளில் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
6.பொதுவாக மாதவிலக்கு நாட்களில் உடற்பயிற்சியை பலர் நிறுத்திவிடுவோம். ஆனால், மிதமான உடற்பயிற்சி பிஎம்எஸ்-ஐ குறைப்பது மட்டுமின்றி அதிக வலியை ஏற்படுத்தும் மாதவிடாய் பிடிப்புகளையும் (menstrual cramps) குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை .
7.பகலில் எவ்வளவு தூங்கினாலும், அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் கைபேசி, மடிக்கணினி போன்ற மின்னணுப் பொருட்களை தவிர்த்து (gadgets) தவிர்த்து புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தால் நன்கு தூக்கம் வரும்.
8. உங்களுக்கு விருப்பமான மனதிற்கினிய பாடல்களை கேளுங்கள், இது மன அழுத்தத்தில் குறைக்க உதவும்.
Premenstrual Syndrome என்பது ஒரு நோயல்ல. அதை நோயாக மாறாமல் இருப்பது, நம் கையில் தான் இருக்கிறது. நம் உடலும் மனமும் இயங்கும் விதத்தை நாம் புரிந்துகொண்டால் எதையும் சரி செய்யலாம்.
உங்கள் மாதவிடாய் தொந்தரவுகளை உங்களால் கையாள முடியவில்லை, அதீத உடல் சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் அதிகரிக்கிறது எனில் நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும்..
Comments
Post a Comment