மாதவிடாய் பற்றியபோதிய விழிப்புணர்வு நமக்கு உள்ளதா??

மாதவிடாய் ௭ன்றால் மாதாமாதம் 3 நாள் உதிரபோக்கு வரும் அப்போது வீட்டுல ஒதுங்கி இருக்கனும், தலைக்கு குளிக்கனும். வீட்டுக்கு தூரம், தீட்டு என்று அருவருக்கதக்க ஒன்றாகதான் இன்றும் பலரால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீட்டு பெரியவர்களிடம்  இன்றும்   மாதவிடாய் என்றால் தீட்டு, சமையலறைக்கு வர கூடாது யாரையும் தொடக்கூடாது  போன்ற மனநிலையே நிலவுகிறது. 
   
மாதவிடாய் என்பது என்ன? 

முதல் மாதவிடாய்  என்பது 13 லிருந்து 15 வயது  நடைபெறுகிறது. 28 லிருந்து 32 நாளுக்கு ஒருமுறை மாதமாதம் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள்  உதிரப்போக்கு  வருகிறது. இது பெண் தாய்மை அடையும் நிலையை அடைந்து விட்டாள் என்பது உணர்த்துகிறது.   பெண்ணின் கருப்பை மாதமாதம்  கருமுட்டையை உருவாக்கி ஆணின் விந்து காக காத்திருக்கும் விந்து வரவில்லை எனில் அது தன்னைத் தானே அழித்துக் உதிர போக்காக வெளியேறுகிறது.இது சுழற்சி முறையில் நடக்கும் ஒரு இயற்கை நிகழ்வாகும். நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை,  மலம், சிறுநீர் போல உதிரப்போக்கும் ஒரு உடல் கழிவு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இதில் தீட்டு அருவருக்கத்தக்கது என்று ஏதுமில்லை. எனவே முதல் முதலில் பெண்ணிற்கு மாதவிடாய் வந்தால் அதை கொண்டாடுவதும் பின் மாதா மாதம் அவளை தீட்டு என ஒதுக்குவதும் தேவையற்றது. பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்  நிச்சயம்  மாதவிடாய் பற்றிய  விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும்.  மாதவிடாய் என்பது என்ன  ஏன் வருகிறது  என்ன செய்ய வேண்டும் அப்போது என்பதைப்பற்றி எல்லாம்  தெளிவாக  எடுத்துரைக்க வேண்டும்.  பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல ஆண் பிள்ளைகளுக்கும் மாதவிடாய் பற்றி சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?

பல ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை,தன் மகளும் மனைவியும் அக்காவும் நாப்கின் வாங்கி வர சொன்னாள் அதை வாங்குவதற்கு  கூச்ச படுபவர்களாக தான் இருக்கின்றனர். பல கணவர்களுக்கு தன் மனைவி உபயோகிக்கும் நாப்கின் அளவு பெயர் கூட தெரிவதில்லை.   பெண்ணின் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பது நல்ல குடும்ப உறவிற்கு அடித்தளம்.
பல பெண்கள் மாதவிடாய்க்கு சில தினங்கள் முன்பும் மாதவிடாயின் போதும் அதிக உடல் சோர்வாகவும்,  மனதளவில் தன்னை மிகத் தாழ்வாக எண்ணுவார்கள். சிலருக்கு  இல்வாழ்க்கையில் ஈடுபாடு இருக்காது, திடீரென கோவப்படுவது, திடீரென அழுவது, முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவது என பல மாற்றங்கள் ஏற்படும். இது அவர்களது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் நடைபெறுகிறது என்பதை ஆண்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்க வேண்டும், உங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். பெண்களின் உதிரப்போக்கு அருவருக்கத் தக்கதல்ல என்பதை உணர்ந்து அவர்களுக்கு துணையாக இருங்கள்.                                      

Comments

Popular posts from this blog

குறட்டை ஆபத்தானதா??

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

டெங்கு காய்ச்சல் 360•