தூக்கத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

தூக்கமின்மை நம்மில் பல பேருக்கு இருக்கும் பிரச்சனை.

ஆரோக்கியமான மனிதன் 7 முதல் 8 மணி நேரம் வரை தடையில்லாமல் தூங்கணும், காலையில் கொஞ்சம் சீக்கிரம்(before sunrises) எழுந்திருக்கணும்.

பலருக்கு இரவில் சரியாக தூக்கம் வருவதும் கிடையாது.

ஏனென்றால்,

1. அதிக மன உளைச்சல் (குடும்பம், வேலை,பொருளாதாரம், படிப்பு.....) இதெல்லாம் பற்றிய தேவையில்லாத அதிக கவலை.

2. செரிமானம் ஆகாத உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது.

3. பகலில் அதிக நேரம் தூங்குவது.

4. அதிகமாக புகை பிடிப்பது.

5. காப்பி/டீ அதிகம் பருகுவது.

6. பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்(menopause), மாதவிடாய் பிரச்சினைகள் அதனால் வரும் உடல் வலி அசதியால் தூக்கம் வராமல் போவது, 
 
7. அதிக நேரம் மொபைல் போன், டிவி,  கம்ப்யூட்டர் பார்ப்பது.

இதுபோல் இன்னும் ஏராளமான காரணங்கள்........

சரியாக தூங்காம இருந்தா நம்ம உடம்பில் என்னென்ன பாதிப்புகள் எல்லாம்  வரும்னு தெரியுமா?

இதைப் பற்றி யோசித்தது உண்டா?

1. சர்க்கரை நோய்.
2. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறுகள்.
3. பார்வை குறைபாடு பிரச்சினைகள்.
4. உடல் பருமன் அதிகரிக்கும்.
5. பகல் நேரங்களில் எப்போதுமே உடல்  சோர்வு.
6. வேலை செய்வதில் தாமதம்.
7. ஞாபக சக்தி குறைவது 
8. கண்களை சுற்றி கருவளையம் வருவது 9. அதிக கவன குறைவு
    - என பல உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் வரும். 

சரி!!!!

இரவு நல்ல தூக்கம் வர நாம் என்ன செய்ய வேண்டும்?

1. இரவு படுப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு சாப்பிடணும்.
2. தூங்குவதற்கு குறைந்தது அரைமணிநேரம் முன்பாவது மொபைல் போன், டிவி உபயோகிப்பதை  நிறுத்தணும்.
3. தினமும் உடல் பயிற்சி கட்டாயம்  செய்யணும். சும்மா  வாக்கிங்  ஆவது அரை மணி நேரம் போகணும். சில்லுனு காலையில ஒரு முறை வாக்கிங் போக ஆரம்பித்தாலே,  உங்களுக்கே அது பிடித்து விடும்.
4. தூங்குவதற்கு முன் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில்  குளித்து, மலம் சிறுநீர் கழித்துவிட்டு  தூங்கணும் 
5. மனசுக்கு இனிமையான பாடலை கேளுங்கள். (இளையராஜா இன்னிசை பாடல்கள் இரவு நேரங்களில் கேட்க நன்றாக இருக்கும்.)
6.  நல்லா காற்றோட்டமான இடத்தில்  தூங்குவது  நல்லது. இந்த  நவீன உலகத்தில்  காற்றோட்டமான  தூங்கும் இடத்திற்கு  நாம் எங்கு செல்வது!! Atleast ஓரளவிற்கு வெண்டிலேஷன் இருக்கும்  இடத்திலாவது தூங்குங்கள். 
7. எதுவா  இருந்தாலும் பொழுது விடிஞ்சு பாத்துக்கலாம் நெனச்சிட்டு தூங்குங்க. நல்லா தூக்கம் வரும்.

மூணு மாசத்துக்கு மேல தொடர்ச்சியா தூக்கம் வராத பிரச்சினை இருந்தா கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். 

Comments

Popular posts from this blog

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

குறட்டை ஆபத்தானதா??

டெங்கு காய்ச்சல் 360•