குழந்தைகளிடம் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல் (Hand, Foot, and Mouth Disease - HFMD)பற்றி அறிவோம்!

கை, கால், வாய் நோய் (Hand, Foot, and Mouth Disease - HFMD) என்பது 2 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். இது வேகமாக பரவும் தன்மையுடையது, ஆனால் மிகவும் கடுமையான அல்லது ஆபத்தான நோய் இல்லை.


நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:


இந்த நோய் பெரும்பாலும் கோசாக்கி வைரஸ் A16 (Coxsackievirus A16) அல்லது என்டரோவைரஸ் 71 (Enterovirus 71) என்ற வைரஸ்களின் காரணமாக ஏற்படுகிறது.


இவை தொற்றுள்ளவரின் இருமல்,தும்மல், அல்லது தொட்டுகொள்வது மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது.


நோயின் அறிகுறிகள்:


காய்ச்சல் இயல்பை விட அதிகமாக உடல் வெப்பம் ஏறுதல்.


தொண்டை வலி சாப்பிட முடியாத அளவுக்கு தொண்டையில் வலி.


வாயில் புண்கள் வாயில் சிறிய கொப்புளங்கள் (blisters) அல்லது புண்கள் ஏற்படலாம், இது குழந்தைகளுக்கு சாப்பிட வலியுடன் இருக்கும்.


கைகளை, கால்களை, பிற உடல்பகுதிகளை ஒட்டிய கொப்புளங்கள் இந்த கொப்புளங்கள் துளைத்த புண்களைப்போல் தோன்றும்.


உடல் சோர்வு குழந்தைகள் சோர்வாகவும், செயலில் ஆர்வமின்றி இருப்பதையும் காணலாம்.


நோயின் பரவும் விதம்:


நோயாளியின் மூக்கு சுரப்பு அல்லது நீர்க்கசிவு தொற்று நோயை பரப்பும்.


தொற்றுள்ள இடங்களைத் தொடுதல்: பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பொருட்களை தொட்டால் மற்றவர்களுக்கு பரவும்.


கழிவுகள் மூலமாகவும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.


சிகிச்சை முறை:


வைரஸ் நோயாக இருப்பதால், நோய்க்கு எதிரான மருந்துகள் இல்லை.


உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.


நோய் குணமாகும் காலம்:


பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் நோய் இயல்பாக குணமாகும்.


நோயை தடுக்கும் வழிகள்:


கைகளை சுத்தமாக வைத்தல் உணவு சாப்பிடும் முன்பும், கழிவறை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.


நோயாளிகளுடன் தொடர்பை தவிர்தல் தொற்றுள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்களுடன் நெருங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.


சுத்தமான பொருட்களை பயன்படுத்துதல் குழந்தைகளின் பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் சாதனங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


நீங்கள் குழந்தைக்கு டயாபர் மாற்றியதும் அல்லது குழந்தையின் ஆசனவாயை சுத்தம் செய்ததும் உங்களின் கைகளையும் குழந்தையின் கைகளையும் நன்றாக சுத்தமாக சோப் போட்டுக் கழுவ வேண்டும் 


நோய் தாக்குண்ட குழந்தையை ஒரு வாரமேனும் தனிமையில் வைத்திருக்க வேண்டும். இது பிறருக்குப் பரவுவதை தடுக்கும் முக்கிய விசயமாகும் 


வீட்டில் அல்லது அருகில் இருக்கும் குழந்தைகள் , நோய் தாக்குண்ட குழந்தையைத் தொடுவதையோ முத்தம் கொடுப்பதையோ ஒரு வாரம் வரை அனுமதிக்கக் கூடாது. 


எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?


காய்ச்சல் நீடித்தால் (3 நாட்களுக்கு மேல்)


குழந்தை எதையும் சாப்பிட முடியாமல் இருந்தால்


அதிகமான மந்த நிலை அல்லது துயரத்தை உணர்ந்தால்

அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை அனுகவும்.


இந்த நோய் பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையினால் மிக விரைவாக குணமாகும். 

Comments

Popular posts from this blog

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

குறட்டை ஆபத்தானதா??

டெங்கு காய்ச்சல் 360•