Posts

மனஅழுத்தம் (Stress) முகப்பருவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மன அழுத்தம் அல்லது ஸ்டிரஸ் என்பது பல உடல் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது, அதில் முகப்பருவும் ஒன்று. ஸ்டிரஸ் நேரடியாகவும், மறைமுகமாகவும் முகப்பருவை மோசமாக்கிறது.  மன அழுத்தம் முகப்பருவை எப்படி மோசமாக்குகிறது? 1. ஹார்மோன் மாற்றங்கள் (Hormonal Changes): ஸ்டிரஸ் ஏற்படும் போது, உடலில் கார்டிசால் (Cortisol) எனப்படும் ஒரு ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இந்த ஹார்மோன், எண்ணெய் சுரப்பிகளை (Sebaceous Glands) தூண்டி, அதிக எண்ணெயை (Sebum) சுரக்கச் செய்கிறது. அதிக எண்ணெய் துவாரங்களை அடைத்து, முகப்பருவை ஏற்படுத்தும். 2. எரிச்சல் அதிகரிப்பு (Increased Inflammation): ஸ்டிரஸ் உடலில் உள்ள எரிச்சல் மூலக்கூறுகளை (Inflammatory Substances) அதிகரிக்கச் செய்கிறது. முகப்பரு ஏற்கனவே ஒரு எரிச்சல் பிரச்சனை என்பதால், இது பருக்களின் சிவப்பு, வீக்கம், மற்றும் வலியை மேலும் மோசமாக்குகிறது. 3. தவறான பழக்கங்கள் (Bad Habits): மன அழுத்தம் அதிகமான போது, சிலர் அடிக்கடி முகத்தை தொடுவார்கள் அல்லது பருக்களை சுரண்டுவார்கள்.இது துவாரங்களில் இருக்கும் பாக்டீரியாவை (Bacteria) பரப்பி, புதிய பருக்களை உருவாக்கும். 4. நோய் எதிர்ப...

குழந்தைகளிடம் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல் (Hand, Foot, and Mouth Disease - HFMD)பற்றி அறிவோம்!

கை, கால், வாய் நோய் (Hand, Foot, and Mouth Disease - HFMD) என்பது 2 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். இது வேகமாக பரவும் தன்மையுடையது, ஆனால் மிகவும் கடுமையான அல்லது ஆபத்தான நோய் இல்லை. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: இந்த நோய் பெரும்பாலும் கோசாக்கி வைரஸ் A16 (Coxsackievirus A16) அல்லது என்டரோவைரஸ் 71 (Enterovirus 71) என்ற வைரஸ்களின் காரணமாக ஏற்படுகிறது. இவை தொற்றுள்ளவரின் இருமல்,தும்மல், அல்லது தொட்டுகொள்வது மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோயின் அறிகுறிகள்: காய்ச்சல் இயல்பை விட அதிகமாக உடல் வெப்பம் ஏறுதல். தொண்டை வலி சாப்பிட முடியாத அளவுக்கு தொண்டையில் வலி. வாயில் புண்கள் வாயில் சிறிய கொப்புளங்கள் (blisters) அல்லது புண்கள் ஏற்படலாம், இது குழந்தைகளுக்கு சாப்பிட வலியுடன் இருக்கும். கைகளை, கால்களை, பிற உடல்பகுதிகளை ஒட்டிய கொப்புளங்கள் இந்த கொப்புளங்கள் துளைத்த புண்களைப்போல் தோன்றும். உடல் சோர்வு குழந்தைகள் சோர்வாகவும், செயலில் ஆர்வமின்றி இருப்பதையும் காணலாம். நோயின் பரவும் விதம்: நோயாளியின் மூக்கு சுரப்பு அல்லது நீர்க்கசிவு தொற்று நோயை பரப்பும். தொற்றுள்ள இ...

மாணவர்களிடம் செல்பேன் பயன்பாட்டை குறைப்பது எப்படி?

செய்திதாளில் வந்த இருவேறு செய்திகள்  1. செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம் வகுப்பறை ஆசிரியருக்கு சரமாரி கத்திகுத்து.  2.செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை.   ஆன்லைன் வகுப்புகள், லாக்டவுனால் விளையாட வெளியே அனுப்ப முடியாத சூழல், நோய்தொற்று குறித்த பயம் என பல காரணங்களால் இந்த கொரோனா சமயங்களில் மாணவர்களிடம் செல்பேன் உபயோகம் அதிகரித்து இருக்கிறது. இதில் செல்போனை கற்றலுக்காக 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை 62.6 சதவீத மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் செல்போன் மூலம் பங்கேற்கிறார்கள். மேலும், 8 முதல் 18 வயதுடைய 30.2 சதவீத மாணவர்களிடம் சொந்த ஸ்மார்ட்போன், 19 சதவீதம் பேர் மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள். மேலும், 10.10 சதவீத மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு உபயோகிப்பதும், மீதமுள்ளவர்களில் 52.90 சதவீதம் பேர் வாட்ஸ்ஆப், முகநூல் உபயோகிக்கவும், 31.90 சதவீத மாணவர்கள் விளையாடுவதற்கும், 44.10 மாணவர்கள் பாட்டு கேட...

டெங்கு காய்ச்சல் 360•

மழைக்காலம் துவங்கிவிட்டது. கனமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, வெள்ள நீர் வீடுகளில் புகுவது என தொடர் செய்திகள் நம்மை அச்சுறுத்துகின்றன. கூடவே மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலும் தான். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது சற்று அதிகரித்து வருகிறது. டெங்குவின் அறிகுறிகளை முதலிலேயே கண்டு சரிசெய்வதும் வராமல் நம்மை தற்காத்து கொள்வதும் அவசியம். டெங்கு காய்ச்சல் பரவுவது எப்படி? ஏடிஸ் எகிப்தி (Aedes aegypti) என்ற ஒருவகை கொசுவால் ஏற்படக்கூடியது டெங்கு காய்ச்சல். மற்ற வகை கொசுக்களிலிருந்து ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். இவற்றின் உடல் மற்றும் கால்களில் வெள்ளை நிற வரிகள் காணப்படும். அதனால் இவற்றை `புலி கொசு' என்றும் கூறுவார்கள். இது பகலில் மட்டும் கடிக்கும் தன்மை கொண்ட கொசுவாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரை ஏடிஸ் எகிப்தி கொசு கடிக்கும்போது, எளிதில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பாகிறது. இது கொரோனாவை போல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்றுநோய் இல்லை. ஏடிஸ் எகிப்தி வகை கொசு ஒருவரைக் கடிப்பதால் மட்டுமே டெங்...

பக்கவாதம் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி?

"நல்லா இருந்தவங்க திடீரென ஒரு நாள் பக்கவாதத்துல படுத்துட்டாங்க" இதுபோன்ற வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டதும் நம் நெருங்கியவர்கள் பலர் இந்நோயால் அவதி படுவதும் உண்டு. பக்கவாதம் பலர் வாழ்க்கையை முடக்கி போட்டுவிடுகிறது.       உலகில் ஆறுவினாடிகளில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதோடு அதில் 30 சதவீதத்தினர் இந்த நோய் தாக்கத்தால் இறந்துவிடுகிறார்கள், மாரடைப்பை அடுத்து பக்கவாத நோயால் உண்டாகும் இறப்பு அதிகம் என்றும் இவை மேலும் அதிகரிக்ககூடும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களை பக்கவாதம் அதிக அளவில் தாக்கி ஓர் இடத்தில் முடக்கிவிடுகிறது. வெகு சிலரே இதிலிருந்து முழுமையாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்புகின்றனர். பக்கவாதம் என்றால் என்ன? நமது அனைத்து செயல்பாடுகளும் மூளையால் கண்காணிக்கப்பட்டு நிகழ்த்தபடுபவையாகும். நமது மூளையை வலது, இடது என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளையும், உடலின் இடதுபக்க செயல்பாட்டை வலது பக்க மூளையும் கண்காணிக்கிறது. மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போக...

கண்களை பராமரிப்போம்!

இந்த உலகின் அழகினை இரசிக்க நமக்கான ஓர் அழகிய உறுப்பு நம் இரு விழிகள். அதனை பத்திரமாக பராமரிப்பது நம் கடமை. தற்போது நடைபெற்று வரும் கோவிட் - 19 தொற்று நோயால், நாம் அனைவரும் டிவி, செல்போன், மடிக்கணினி போன்ற டிஜிட்டல் திரைக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறோம். இது நம் கண்களில் வலியை ஏற்படுத்தும் மற்றும் நம் கண் பார்வையில் சிரமத்தை ஏற்படுத்தும். பொதுவாகவே, நாம் அனைவரும் டிவி, மடிக்கணினி அல்லது தொலைபேசி போன்ற டிஜிட்டல் திரையை பார்க்கும் போது அதிகமாக கண் சிமிட்ட மாட்டோம். இது நம் கண்களை வறண்டு போக செய்யும் மற்றும் இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேலும் தூங்கும் முன் தொலைபேசியை உற்று பார்ப்பது நம் தூக்கத்தை கெடுக்கும். இதனால் கண்கள் சிவந்து போகலாம், மற்றும் கண்களில் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.  நாம் தவிர்க்க வேண்டிய சில விசயங்கள்: ​கண்களை கசக்குவது: நாம் அனைவரும் கண்களில் நமைச்சல் இருக்கும் போது நம் கண்களை கசக்கி கொள்வோம். அடுத்த முறை இவ்வாறு செய்வதை தயவு கூர்ந்து நிறுத்துங்கள். ஏனெனில், நம் கண்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுப்பது உண்மையில் நம் பிரச்சனையை இன்னும் மோச...

குறட்டை ஆபத்தானதா??

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.  விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது? தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது. அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது. அதிக சத்தத்துடன் குறட்டை வர என்ன காரணம்? சளியுடன் கூடிய மூக்கடைப்பு ஒவ்வாமை (allergy) சைனஸ் தொல்லை அடினாய்டு/டான்சில் வளர்ச்சி மூக்கு இடைச்சுவர் வளைவு (deviated nasal septum) தைராய்டு பிரச்சினை உடல் பருமன் (obesity) கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது  புகை பிடிப்பது,  மது குடிப்பது,  அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவ...